தற்போது கடிதம் எழுதும் கலாச்சாரமே இல்லாமல் போய்விட்டது. அரசு அலுவலகங்களுக்கு பணி நிமித்தமாக கடிதம் எழுதுவதோடு சரி. உறவு ரீதியான கடிதங்கள் எழுதுவதையே மறந்து போனோம். சமீபத்தில் நான் படித்த அன்டன் செக்காவின் ஒரு கடிதம் என் மனதை உலுக்கிப் போட்டுவிட்டது. அன்றைய முழு இரவையும் அவரின் கடிதம் முழுங்கி விட்டது. அதை கீழே நினைவிருக்கிற வரையில் பதிவு செய்கிறேன்.
கிராமத்தில் வறுமையில் வாடும் ஒரு வயதான தாத்தா தன் பேரனை வெளியூருக்கு அழைத்துச் சென்று ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்க்கிறார். ஆரம்பத்தில் அந்த 10 வயது பேரனை அந்த வீட்டுப் பணக்காரர்கள் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார். பிற்பாடு கொடுமைப் படுத்த ஆரம்பிக்கிறார்கள். சரியாக உணவு போடாமல் வேலை வாங்குவது. நாய்களோடு உண்ணச் சொல்வது போன்ற கொடுமைகளை அந்த சிறுவன் அனுபவிக்கிறான். தன்னை காப்பாற்ற வேண்டி தன் தாத்தாவுக்கு கடிதம் எழுதுகிறான்.
அன்புள்ள தாத்தா,
என்ன உடனே கூட்டிட்டுப் போய்டு. என்னால இங்க இருக்க முடியல. என்ன ரொம்ப கொடுமப்படுத்துறாங்க. நா சாப்டு நாலு நாள் ஆவுது. இந்த லெட்டர பார்த்ததும் உடனே வந்து கூட்டிட்டுப் போய்டு
அன்புடன்
பேரன்
பெறுநர்
தாத்தா
கிராமம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக