ஒரு முறை நிதி வசூலிப்பதற்காக வீடு வீடாகச் சென்று கொண்டிருந்தோம். ஒரு வீட்டின் வாசலில் நாய்கள் ஜாக்கிரதை என்று பலகை எச்சரிக்கை செய்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே சென்றோம். போகிற வழியில் ஒரு நாய் எங்களை கண்டும் காணாமலும் அமைதியாக தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தி பதிலுக்காக காத்திருந்தோம். எண்பது கிலோ எடையுடன் ஒரு உருவம் எங்களைப் பார்த்து வந்தது. கழுத்தில் குறைந்தது அரை கிலோவுக்கு தங்க செயின் வேறு.
என்ன வேணும்? (எரிச்சலுடன்)
ஐயா ஏழைக்குழந்தைகளின் உணவுக்காக வீடுவீடாகச் சென்று நிதி வாங்குகிறோம். முடிந்தால் எங்களிடம் தாருங்கள் இல்லை எனில் இந்த காப்பகத்துக்கு வந்து பார்த்த பிறகு தாருங்கள் என்றோம்.
பிற்பாடு அவர் பேசிய அனைத்து வார்த்தைகளும் ஒரு நாய் குரைப்பதைப் போலவே இருந்தது.
பலகையில் எழுத்துக்கள் சரியாகவே இருந்தது
நாய்கள் ஜாக்கிரதை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக