செவ்வாய், 31 மே, 2011

பெரியாரைப் பற்றி

பெரியாரைப் பற்றி ஒரு சுவையான தகவல்.
பெரியார் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஒரு முறை பேரறிஞர் அண்ணா அவர்கள் விழுப்புரத்தில் நடிகர்களின் மாநாடுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போதிருந்த சூப்பர் ஸ்டார்களான பி.யு.சின்னப்பா, தியாகராசா பாகவதர் போன்றோரிலிருந்து அனைத்து தரப்பட்ட நடிகர்களும் கலந்து கொண்ட மாநாடு அது. அந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளர் தந்தை பெரியார்.

பெரியார் அனைவரின் மத்தியிலும் பேச ஆரம்பிக்கிறார். ஐயா நடிகர்களே உங்களுக்கு எல்லாம் நாற்பதாயிரம் சம்பளம் என்று கேள்விப்படுகிறேன் உண்மையா? (நடிகர்களுக்கு கிலி பிடிக்கத் தொடங்குகிறது) உங்களுக்கு இந்த சம்பளம் நியாயமாகப் படுகிறதா? வயலில் வேலை செய்கின்ற உழவனுக்கு காலணா சம்பளம். ஆனால் அவன் இல்லை என்றால் நாம் அனைவரும் இறந்து விடுவோம். ஆனால் நீங்கள் இறந்து போனால் யாருக்கு நஷ்டம் என்று வெளிப்படையாகவே நடிகர்களை விமர்சித்தவர் தந்தை பெரியார். ஆனால் இவரின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்கின்ற சிலர் ஆட்சியில் இருக்கும்போது வாரம் ஒரு பாராட்டு விழா, அனைத்து நடிகர்களையும் அழைத்து தன்னை பாராட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவது என்று இருக்கின்றனர். தன் வாரிசுகளைத் திருத்துவதற்கே பெரியார் மீண்டும் பிறக்கவேண்டும் போல.

1 கருத்து: