திங்கள், 6 ஜூன், 2011

சார்லி சாப்ளின் என்றொரு சகாப்தம்


     வாய்ப்பிருந்தால் சார்லி சாப்ளின் அவர்களின் தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தைப் பாருங்கள். அதில் வரும் ஒரு காட்சியில் சிங்கத்தின் வாய்க்குள் தன் தலையை நுழைத்து வெளியே எடுப்பதாக சார்லி சாப்ளின் ஒரு காட்சியை அமைத்து இருப்பார். அந்த காட்சிக்காக அவர் தன் உயிரைப் பணயம் வைத்தது 48 தடவை என்று சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். 48 வது தடவை எடுக்கப்பட்ட காட்சியே சார்லி சாப்ளினை திருப்திப்படுத்தி இருக்கிறது. ஒரு நிமிடக் காட்சிக்காக தன் உயிரைப் பணயம் வைக்கத் துணிந்த அளவுக்கு உழைத்ததால் தான் வரலாறு அவரை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறது.

    தி சர்க்கஸ் படத்திற்காக ஒரு முறையும், தி லைம் லைட் படத்தில் இசையமைத்ததற்காக ஒரு முறையும், வாழ்நாள் சாதனைக்காக ஒரு முறையும் என 3 ஆஸ்கார் விருதுகளைப் பெற்று ஆஸ்காரை அலங்கரித்த ஒரே நகைச்சுவை நடிகன் சார்லி சாப்ளின் தான்.

   மியூச்சுவல் நிறுவனத்திற்காக மொத்தம் 12 திரைப்படங்களை இயக்கி நடித்தார் சார்லி. அதற்காக அவர் பெற்ற சம்பளம் 1 மில்லியன் டாலர். உலக சினிமா வரலாற்றில் முதல் மில்லியன் டாலர் சம்பளக்காரர் சார்லி சாப்ளின் தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக