ஞாயிறு, 3 ஜூலை, 2011

பதிவு


இனி 
எல்லாவற்றையும்
பதிவு செய்து கொள்வோம்
இன்றைய நிகழ்வுகள்
ஒன்று விடாமல்...

இன்று போல்
நாளை இருப்பதில்லை

கிளை விரித்து
நேசம் கொடுக்கும்
பசும் மரங்களை....

செவி நுழைந்து
இதயம் சேரும் 
குயிலின் கீதங்களை....

குளம் தேடி 
நீச்சலடித்து
குதூகலித்திடும்
வெண் நாரைகளை.....

மனம் பறித்து 
காற்று வெளிதனில்
கடந்து செல்லும்
மலரின் வாசத்தை.....

பெயரிடா ராகங்களில்
இசையாய் பேசிடும்
கொலுசின் சிணுங்கல்களை....

என
ஒன்று விடாமல் 
எல்லாவற்றையும்
பதிவு செய்து கொள்வோம்

இன்று போல்
நாளை இருப்பதில்லை
நம்மையும் சேர்த்து....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக