திங்கள், 25 ஜூலை, 2011

ஜன்னல்கள்




இன்று அதிகம் ஜன்னல்கள்
உள்ள வீட்டைக் கட்டுகிறோம்.
பூப்போட்ட ஜன்னல்,
கம்பி வைத்த ஜன்னல்,
சட்டம் வைத்த ஜன்னல்,
கண்ணாடி ஜன்னல் என
ஜன்னல்கள் அலங்கரிக்கிறது
வீடுகளை.
என் கிருஷ்ணன் சித்தப்பா வீட்டில் மட்டும்
12 ஜன்னல்கள் இருப்பதை
எண்ணிப் பார்த்து தெரிந்து கொண்டேன்.
இன்று ஜன்னல்கள் அதிகம் உள்ள
வீடுகள் பெருகி விட்டன.
ஆனால் அவைகள்
திறக்கப்படக்கூடாது
என்ற நிபந்தனைகளுடன் தான்
வைக்கப்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக